அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்?


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்?
x

லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அருண் மாதேஸ்வரன், “வன்முறை மட்டும்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை,

'மாநகரம்' படத்தை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து 'கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். இதற்காகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

தற்போது ரஜினியை வைத்து 'கூலி' என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும், கைதி 2, ரோலக்ஸ், விக்ரம் 2 ஆகிய படங்களை இயக்க உள்ளார். இது தவிர தனது ஜிஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது, தனுஷ் நடிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படம் ஒரு அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. இதற்காக தற்போது லோகேஷ் தற்காப்பு கலைகளை கற்று வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அருண் மாதேஸ்வரன், "வன்முறை மட்டும்தான்" எனத் தெரிவித்துள்ளார். இதனால், இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


1 More update

Next Story