’அது தாங்கமுடியாத வலியை தந்தது’ - கீர்த்தி ஷெட்டி

தற்போது கீர்த்தி ஷெட்டி’வா வாத்தியார்’ உள்பட 2 தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
சென்னை,
பிளாக்பஸ்டர் "உப்பெனா" படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி, இருப்பினும், அவரது அடுத்தடுத்த படங்கள் எதுவும் முதல் படத்தின் வெற்றியை ஈடுசெய்ய முடியவில்லை.
தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்த பிறகு, கீர்த்தி படிப்படியாக தெலுங்கு பட வாய்ப்புகளை இழந்தார். இப்போது தனது கவனத்தை தமிழ் சினிமாவுக்கு மாற்றியுள்ளார். தற்போது அவர் வா வாத்தியார் உள்பட 2 தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
வா வாத்தியார் படம் வருகிற 12 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், கீர்த்தி புரமோஷன்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்திய ஒரு நேர்காணலில், தான் சந்தித்த கடுமையான டிரோலிங் மற்றும் விமர்சனங்களை நினைவு கூர்ந்தார்.
அவர் பேசுகையில், "நான் மிகச் சிறிய வயதிலேயே அதிக டிரோலிங்கை அனுபவித்தேன். தொடர்ந்து என் படங்கள் வெற்றி பெறாதபோது, நியாயமே இல்லாமல் விமர்சனங்களை சந்தித்தேன். நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயங்களுக்காக விமர்சனம் வரும்போது அது தாங்க முடியாத வலியை தந்தது," என்றார்.






