''கவின் 09'' - அப்டேட் கொடுத்த இயக்குனர்

இதில் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
சென்னை,
நடிகர் கவினின் 9 -வது படத்தை கனா காணும் காலங்கள் தொடரை இயக்கிய கென் ராய்சன் இயக்குகிறார். இதில் கவினுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தநிலையில், படத்தை பற்றிய முக்கிய அப்டேட்டை இயக்குனர் பகிர்ந்திருக்கிறார். அவர் கூறுகையில், ''இது ஒரு காதல் நகைச்சுவை படம். வாழ்க்கை நமக்கு வழங்கும் வாய்ப்புகளை சரியான வழியில் பயன்படுத்த வேண்டும், தவறவிட்டால் அதை சரிசெய்ய அதிக காலம் ஆகும் என்பதை பற்றிய கதை.
படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்குகிறது. காதல் நகைச்சுவை படங்கள் தமிழில் நிறைய வெளிவந்துள்ளன, ஆனால் இது இன்னும் வித்தியாசமாக இருக்கும். கவின்தான் எனது முதல் தேர்வு. கவினும் பிரியங்காவும் ஜோடி சேருவது நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்'' என்றார்.
'லிப்ட், டாடா, ஸ்டார்' போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'பிளடி பெக்கர்' படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனை தொடர்ந்து கிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், தண்டட்டி பட இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.