திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா 'காந்தாரா: சாப்டர் 1'? - படக்குழு முக்கிய தகவல்


Kantara Chapter 1 makers end release date rumors; Deets inside
x
தினத்தந்தி 23 May 2025 7:23 AM IST (Updated: 23 May 2025 7:34 AM IST)
t-max-icont-min-icon

'காந்தாரா: சாப்டர் 1' திட்டமிட்டபடி அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

ஐதராபாத்,

ரிஷப் ஷெட்டி நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'காந்தாரா' படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. 'காந்தாரா: சாப்டர் 1' என பெயரிடப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், சமீபத்தில் இப்பட நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால், இப்படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்படும் என்றும் இணையத்தில் வதந்திகள் பரவின.

இந்நிலையில், இப்படக்குழு முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளது. அதன்படி, 'நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம், திட்டமிட்டபடி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. 'காந்தாரா சாப்டர் 1' அக்டோபர் 2-ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும்.

எங்களை நம்புங்கள். வதந்திகளை நம்ப வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்' என்று தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

1 More update

Next Story