‘லோகா’ நடிகையின் புதிய படம் பூஜையுடன் துவக்கம்


Kalyani Priyadarshan headlines Potential Studios’ seventh production!
x

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ஏழாவது படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சென்னை,

'மாயா', 'மாநகரம்', 'மான்ஸ்டர்', 'டாணாக்காரன்', 'இருகபற்று' மற்றும் பிளாக் ஆகிய படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் அதன் ஏழாவது திரைப்படத்திற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தில் ‘லோகா’வின் மூலம் இந்திய அளவில் பிரபலமான கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் தேவதர்ஷினி மற்றும் வினோத் கிஷன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை திரவியம் எஸ்.என் இயக்குகிறார்.

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் பதாகையின் கீழ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு, பி. கோபிநாத் மற்றும் தங்கபிரபாகரன் ஆர் ஆகியோர் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. இந்த படம் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story