22 வருடங்களுக்குப் பிறகு சினிமாவுக்கு திரும்பிய நடிகர்


Kalyana Chakravarthy returns to films after 22 years
x
தினத்தந்தி 7 Dec 2025 7:15 PM IST (Updated: 7 Dec 2025 7:15 PM IST)
t-max-icont-min-icon

கடைசியாக 2003 ஆம் ஆண்டு வெளியான கபீர் தாஸ் படத்தில் நடித்திருந்தார்.

சென்னை,

மூத்த தயாரிப்பாளர் என். திரிவிக்ரம ராவின் மகனான கல்யாண சக்ரவர்த்தி, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். 1980களின் பிற்பகுதியிலும் 1990களின் முற்பகுதியிலும் பல படங்களில் நடித்திருந்த இவர், கடைசியாக 2003 ஆம் ஆண்டு வெளியான கபீர் தாஸ் படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்பு, எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த இவர், தற்போது, ​​22 ஆண்டுகளுக்குப் பிறகு, "சாம்பியன்" மூலம் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார். இப்படத்தில் ராஜி ரெட்டி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.

ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் “சாம்பியன்” படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். பிரதீப் அத்வைதம் இயக்கியுள்ள இந்தப் படம், செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்த ஒரு கால்பந்து வீரரின் பயணத்தை மையமாகக் கொண்டுள்ளது.இப்படம் வருகிற 25-ம் தேதி திரைக்கு வருகிறது.

1 More update

Next Story