'காந்தா' - துல்கர் சல்மானை பாராட்டிய லோகா பட நடிகை

நடிகை கல்யாணி பிரியதர்ஷன், துல்கர் சல்மானின் 'காந்தா'வில் அவரது நடிப்பை பெரிதும் பாராட்டியுள்ளார்.
சென்னை,
'காந்தா' திரைப்படம் வெற்றி பெற்றுள்ள நிலையில், துல்கரின் நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர். நடிகை கல்யாணி பிரியதர்ஷன், துல்கர் சல்மானின் சமீபத்திய படமான 'காந்தா'வில் அவரது நடிப்பை பெரிதும் பாராட்டியுள்ளார். இது தனக்கு மிகவும் பிடித்த துல்கர் சல்மானின் நடிப்பு என்று அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் குறிப்பிட்டுள்ளார்.
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் நேற்று முந்தினம் வெளியான படம் 'காந்தா'. இப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Next Story






