’ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா - நேரலையில் பாடப்போகும் பிரபலங்கள்

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் டிசம்பர் 27-ம் தேதி நடக்கிறது.
சென்னை,
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் டிசம்பர் 27-ம் தேதி நடக்க உள்ள நிலையில் பாடகி சைந்தவி உள்ளிட்ட பலர் இசை வெளியீட்டு விழாவில் நேரலையில் பாடப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, சைந்தவி , ஆண்ட்ரியா, அனுராதா ஸ்ரீராம் மற்றும் பாடகர் திபு உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். விஜய்யின் `ஆதி திரைப்படத்தில் ஏ டுர்ரா பாடலில் தொடங்கி தெறி திரைப்படத்தில் ’என் ஜீவன்' பாடல் வரை பல பாடல்கள் பாடியுளளார் சைந்தவி என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகன் விஜய்யின் கடைசி படம் என்பதால் இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது.
Related Tags :
Next Story






