"அவதார்: பயர் அண்ட் ஆஷ்" பட ரிலீசையொட்டி ராஜமவுலியை வீடியோ நேர்காணலில் சந்தித்த ஜேம்ஸ் கேமரூன்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய இப்படம் நாளை வெளியாகிறது.
சென்னை,
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 'அவதார்' படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார்: தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் வெளியானது.
தற்போது அதன் 3-ம் பாகம் உருவாகி உள்ளது. இதற்கு ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இப்படம் நாளை உலக அளவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், அவதார் 3 பாகத்தை இந்தியாவில் புரோமோஷன் செய்யும் வகையில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலிக்கு ஜேம்ஸ் கேமரூன் சிறப்பு வீடியோ நேர்காணல் கொடுத்துள்ளார். அதில், அவதார் படத்தை பற்றியும் அவர் பேசியுள்ளார். குறிப்பாக ராஜமவுலியின் அடுத்த படமான 'வாரணாசி' படம் குறித்து கேட்டறிந்த ஜேம்ஸ் கேமரூன், அப்படத்தில் புலிகளை வைத்து ஏதேனும் காட்சிகள் படமாக்கப்பட்டால் என்னை கூப்பிடுங்கள் நான் வருகிறேன் என்று ஜாலியாக தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






