லவ் டுடே நடிகையின் 'சிங்கிள்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு


Ivanas Single release date announced
x
தினத்தந்தி 26 April 2025 9:15 AM IST (Updated: 26 April 2025 9:16 AM IST)
t-max-icont-min-icon

'ராபின்ஹுட்' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய கெட்டிகா ஷர்மாவும் இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சென்னை,

நடிகர் ஸ்ரீ விஷ்ணு,'ராபின்ஹுட்' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய கெட்டிகா ஷர்மா மற்றும் 'லவ் டுடே' நடிகை இவானா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் யூத் புல் ரொமாண்டிக் என்டர்டெய்னர் 'சிங்கிள்'.

கார்த்திக் ராஜு இயக்கியுள்ள இப்படத்தை கல்யா பிலிம்ஸ் பேனரின் கீழ் வித்யா கோப்பினிடி, பானு பிரதாபா மற்றும் ரியாஸ் சௌதர் ஆகியோர் தயாரித்திருக்கின்றனர். சீதாராமம் புகழ் விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த மாதம் 9-ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story