"மாரீசன்" படத்தின் கதை இதுவா?.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

வடிவேலு, பகத் பாசில் நடிப்பில் உருவான மாரீசன் படம் வருகிற 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் கடந்த 2023-ம் ஆண்டு 'மாமன்னன்' படம் வெளியாக மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து 'மாரீசன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கி உள்ளார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வருகிற 25 ந் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் கதைசுருக்கத்தை இயக்குநர் சமீபத்தில் நடந்த நேர்காணலில் கூறியுள்ளார். அல்சைமர் நோயாளியான வடிவேலு ஒரு பணக்காரர். வடிவேலு ஏடிஎம் பயன்படுத்தும் போது அவரிடம் உள்ள பணத்தை பகத் பாசில் பார்த்துவிடுகிறார். அந்த பணத்தை எடுப்பதற்காக பகத் பாசில், வடிவேலுவை தானே பைக்கில் டிராப் செய்வதாக கூறுகிறார். திருவண்ணாமலை முதல் நாகர்கோவில் வரை பைக்கில் இவர்கள் செய்யும் பயணம் செய்கின்றனர். பகத் பாசில் கடைசியில் வடிவேலுவிடம் இருந்து பணத்தை திருடினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதையாகும்.