தனுஷ் - மிருணாள் தாக்கூர் இடையே காதலா? வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் தனுஷ், மிருணாள் தாக்குர் இடையேயான கிசுகிசுக்கள் மீண்டும் பேசுபொருளாகி உள்ளன.
சீதாராமம் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். இவர் நடிப்பில் வெளியான ஹாய் நான்னா, பேமிலி ஸ்டார், கல்கி 2898 ஏடி படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இவருக்கு பெற்றுத்தந்தது. இவர் தற்போது பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ், தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, பாலிவுட், ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவரின்‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. தனுஷ் படங்களில் பிஸயாக நடித்து வந்தாலும் அவரைத் சுற்றி வதந்திகளும் அடிக்கடி பரவிக்கொண்டுதான் இருக்கின்றன. தனுஷும் நடிகை மிருணாள் தாக்கூரும் டேட்டிங் செய்வதாக அண்மையில் வதந்தி பரவி வந்தது. ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள் என்று மிருணாள் தாக்கூர் சமீபத்தில் கூறியிருந்தார்.
இருவரும் இன்னும் டேட்டிங் செய்து வருகிறார்கள் என்று ரசிகர்கள் மீண்டும் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். தனுஷ் மும்பையில் நடந்த பல பார்ட்டிகளில் கலந்து கொண்டபோது, மிருணாள் தாகூர் அவருடன் நெருக்கமாக பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.






