ரூ.45 கோடி செலவு...ரூ.60 ஆயிரம் வசூல் - பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியடைந்த படம் ; எது தெரியுமா?

நட்சத்திர நடிகர்கள் இருந்தபோதிலும் பாக்ஸ் ஆபீஸில் இந்த படம் படுதோல்வியடைந்தது.
சென்னை,
திரையுலகின் நிலைமை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. கதை நன்றாக இருந்தால், நட்சத்திரங்கள் இல்லாவிட்டாலும், சிறிய படங்கள் கூட மக்களின் வரவேற்பை பெறுகின்றன. மிகப்பெரிய புரமோஷன்கள் எதுவுமின்றி வெளியாகி மக்களை ஈர்க்கின்றன.
இப்போது நாம் பேசப்போகும் படம் திரைப்படத் துறையில் மிகப்பெரிய பேரழிவு சந்தித்த படம். நட்சத்திர நடிகர்கள் இருந்தபோதிலும் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியடைந்தது. கிட்டத்தட்ட ரூ. 45 கோடி செலவில் உருவானது, ஆனால் அது ரூ. 60 ஆயிரம் மட்டுமே வசூலித்தது. அதந் படம்தான் ’தி லேடி கில்லர்’. 2023 இல் வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியடைந்தது.
பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், பூமி பட்னேகர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தின் மொத்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ.60 ஆயிரம் மட்டுமே. இது அர்ஜுன் கபூரின் வாழ்க்கையில் ஒரு நிரந்தரக் கறையாகவே இருந்து வருகிறது.






