’ஜனநாயகன் படத்தில் நடிக்க நிறைய முயற்சி செய்தேன்’- நடிகர் முனீஸ்காந்த்


I tried hard to act in the film Jananayagan - Actor Muneesh Kant
x

ஜனநாயகன் படத்தை மிஸ் பண்ணதாக முனீஸ்காந்த் தெரிவித்தார்.

சென்னை,

‘சூது கவ்வும்', ‘முண்டாசுப்பட்டி', ‘ஜிகர்தண்டா', ‘டார்லிங்-2', ‘மாநகரம்', ‘டிடி ரிட்டன்ஸ்', ‘கேங்கர்ஸ்' போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர், முனீஸ்காந்த். நகைச்சுவையில் அசத்தி வந்த முனீஸ்காந்த் தற்போது 'மிடில் கிளாஸ்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த 21ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் ஒரு நேர்காணலில் பேசிய முனீஸ்காந்த் , ஜனநாயகன் படத்தை மிஸ் செய்ததாக தெரிவித்தார். அவர் கூறுகையில்,

``ஜனநாயகன் படத்தில் நடிக்க நிறைய முயற்சி செய்தேன். அந்த இயக்குனரை பார்த்து வாய்ப்பு கொடுங்கள் என கேட்டேன். விஜய்யின் கடைசி படம் இது. கூட்டத்தில் நிற்பது மாதிரியாவது ஒரு காட்சி வையுங்கள் என கேட்டேன். அவர் சரி என சொல்லி எனக்கு ஒரு கதாபாத்திரமும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் வேறு ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதால் நடிக்க முடியாமல் மிஸ் செய்து விட்டேன். வருத்தமாக இருக்கிறது’’என்றார்.

ஜன நாயகன் படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், நரேன், கவுதம் மேனன், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார்.

1 More update

Next Story