எனக்கு கவர்ச்சி காட்டி நடிப்பதில் பிரச்சினை இல்லை- 'ஆரோமலே' பட நடிகை


எனக்கு கவர்ச்சி காட்டி நடிப்பதில் பிரச்சினை இல்லை- ஆரோமலே பட நடிகை
x

நடிகை சிவாத்மிகாவிடம், கதைகளை தேர்வு செய்யும் விதம் பற்றி கேட்கப்பட்டது.

சென்னை,

இதுதாண்டா போலீஸ் படத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்த டாக்டர் ராஜசேகர் - ஜீவிதாவின் இளைய மகள் சிவாத்மிகாவும் நடிகை ஆவார். தமிழில் பாம், ஆரோமலே படங்களில் நடித்துள்ள சிவாத்மிகா, தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிவாத்மிகாவிடம், ‘கதைகளை தேர்வு செய்யும் விதம்' பற்றி கேட்கப்பட்டது.

இதற்கு அவர் பதிலளிக்கும்போது, ‘‘இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று எந்த இலக்கணமும் நான் வகுத்துக் கொண்டதில்லை. கதை நன்றாக இருக்கும்பட்சத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதை ஏற்று நடிக்கலாம். அதேவேளை படக்குழுவினர் பற்றிய புரிதலும் முக்கியம்.

எனக்கு கவர்ச்சி காட்டி நடிப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் அது ரசிப்புக்குரியதாக இருக்கவேண்டுமே தவிர, முகம் சுளிக்கும்படி இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் வித்தியாசம் உண்டு. அந்த விஷயத்தில் நான் ரொம்பவே உஷார்'', என்றார்.

1 More update

Next Story