“என்ன நடந்துச்சு எனக்கே தெரியல”… வைரல் வீடியோவுக்கு வெற்றிமாறன் ரியாக்ட்!

பட விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறனின் ரியாக்சன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை,
சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு பட விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில், மேடையில் இருப்பவர்களை பார்த்து கோபமாக பேசுவதும், அடுத்த வினாடி சாந்தமாகி சிரிப்பதுமாக அவர் நடந்துகொண்டார்.
ஒரே நேரத்தில் ‘அந்நியன்' விக்ரம் மாதிரி, முக பாவனைகளை மாற்றும் அவரது வீடியோ இணையத்தில் ‘டிரெண்ட்' ஆனது. இதையொட்டி கிண்டல் ‘மீம்ஸ்'களும் வைரலானது. பெரியளவில் அவர் ‘டிரோல் செய்யப்பட்டார். இதுகுறித்து வெற்றிமாறனிடம் கேட்டபோது, ‘‘உண்மையாகவே சொல்றேன், ஏன் அப்படி ரியாக்ட் பண்ணினேன் என்று எனக்கே தெரியல. ஆனால் அந்த வீடியோவுக்கு கண்டபடி ‘மீம்ஸ்’கள் போட்டு என்னை ஒரு வழி செஞ்சுட்டாங்க.
உண்மையிலேயே என்ன நடந்தது? என்று தெரியவில்லை. நானும் யோசித்து யோசித்து பார்க்கிறேன், எதுவும் பிடிபட மாட்டேங்குது. என்ன செய்வது? என்றும் புரியவில்லை'', என்று கலகலப்பாக பதிலளித்தார்.






