'மகாநதிக்குப் பிறகு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை' - கீர்த்தி சுரேஷ்


I didnt get any film opportunities after mahanati  - Keerthy Suresh
x
தினத்தந்தி 24 Nov 2025 10:12 AM IST (Updated: 24 Nov 2025 12:00 PM IST)
t-max-icont-min-icon

கீர்த்தி சுரேஷ் தற்போது ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

நடிகை கீர்த்தி சுரேஷ் சந்துரு இயக்கத்தில் ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இப்படம் வருகிற 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது.

தற்போது ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்று வருகிறார். இதற்கிடையில், ஒரு நேர்காணலில் பேசிய அவர், மகாநதிக்குப் பிறகு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். அவர் பேசுகையில்,

"சொன்னா நம்ப மாட்டீங்க, மகாநதி ரிலீஸானப் பிறகு, 6 ​​மாதங்களுக்கு எனக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. யாரும் என்னிடம் கதை சொல்லவும் வரவில்லை. இதனால் நான் சோர்வடையவில்லை.

எனக்கான ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை உருவாக்க அவர்கள் நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் என்று அதை நேர்மறையாக எடுத்துக் கொண்டேன். அந்த நேரத்தை என்னை தயார்படுத்திக்கொள்ள பயன்படுத்திக்கொண்டேன்" என்றார்.

1 More update

Next Story