’அல்லு அர்ஜுனை மலையாள நடிகர்னு நினைத்தேன்’ - அனஸ்வரா


I did not know that ALLU ARJUN sir was a TELUGU ACTOR - AnaswaraRajan
x
தினத்தந்தி 21 Dec 2025 9:15 AM IST (Updated: 21 Dec 2025 9:15 AM IST)
t-max-icont-min-icon

அனஸ்வரா தற்போது சாம்பியன் படத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

மகாநதி, சீதா ராமம் போன்ற கிளாசிக் படங்களை தயாரித்த ஸ்வப்னா சினிமா தற்போது ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் நடிப்பில் ’சாம்பியன்’ என்ற படத்தைத் தயாரித்துள்ளது.

இதில் , கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா நடித்திருக்கிறார். இதன் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் பிரதீப் அத்வைதம் இயக்கும் இப்படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற 25-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், ஒரு நேர்காணலில் அனஸ்வரா பேசுகையில்,

"முன்பு, அல்லு அர்ஜுன் சார் ஒரு தெலுங்கு நடிகர்னு எனக்குத் தெரியாது. அவர் ஒரு மலையாள நடிகர்னு நினைச்சு, அவருடைய படங்களைப் பாத்துட்டு இருந்தேன்" என்றார். அன்ஸ்வராவின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story