ஹாரி பாட்டர் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி

ஹாரி பாட்டர் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகி உள்ளது.
சென்னை,
ஜே.கே.ரவுலிங் எழுதிய 'ஹாரி பாட்டர்' நாவலை அடிப்படையாக கொண்டு வார்னர் புரோஸ் நிறுவனம் 8 படங்களை தயாரித்து வெளியிட்டது. இந்த படங்களில் டேனியல் ராட்க்ளிப் , ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகியோர் மூன்று முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர்.
8 பாகங்களாக வெளியான 'ஹாரி பாட்டர்' படங்கள் இப்போது வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. இந்தத் தொடரை 2027-ம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹாரி பாட்டர் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகி உள்ளது. உலகின் முதல் ஹாரி பாட்டர் தீமில் உருவாக்கப்பட்ட ஓட்டல் ஜெர்மனியில் விரைவில் திறக்கப்பட உள்ளது. கிரிபிண்டர், ஹபிள்பப், ரேவன்க்லா, ஸ்லிதரின் ஆகிய 4 வீடுகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. படத்தில் பார்த்ததை நிஜ உலகில் உணரும் வகையில் வார்னர் புரோஸ் இதனை உருவாக்கி உள்ளனர்.
Related Tags :
Next Story






