'டாடா' பட இயக்குனரின் தயாரிப்பில் நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக்

இந்த படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
சென்னை,
நடிகர் கவுதம் ராம் கார்த்திக் 'கடல்' படத்தில் அறிமுகமாகி தன் அடுத்தடுத்த படங்களில் மினிமம் பட்ஜெட் நாயகனானார். "வை ராஜா வை, ரங்கூன், ஆகஸ்ட் 16 ,1947, பத்து தல" உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றிப்படமாகின.
அதனை தொடர்ந்து கிரைம் திரில்லர் கதையில் உருவாகி வரும் 'ரூட் - ரன்னிங் அவுட் ஆப் டைம்' என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தினை 'நாளைய இயக்குநர் சீசன் 1' மூலம் கவனத்தை ஈர்த்த சூரியபிரதாப் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது-
இதற்கிடையில், நடிகர் கவுதம் ராம் கார்த்திக் டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் ராஜு முருகனின் உதவியாளரான, அறிமுக இயக்குனர் தினா ராகவன் இயக்க உள்ளார். நடிகை அஞ்சனா நேத்ரா நாயகியாக நடிக்க உள்ளார். மேலும் செல்வராகவன், ராபி, பி. வாசு, ஏ. வெங்கடேஷ், மாறன், இந்துமதி, ஆதித்யா கதிர் ஆகிய முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.






