“ரூட்” படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த கவுதம் ராம் கார்த்திக்

அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக இப்படம் உருவாகி வருகிறது.
சென்னை,
நடிகர் கவுதம் ராம் கார்த்திக் 'கடல்' படத்தில் அறிமுகமாகி தன் அடுத்தடுத்த படங்களில் மினிமம் பட்ஜெட் நாயகனானார். வை ராஜா வை, ரங்கூன், ஆகஸ்ட் 16 ,1947, பத்து தல உள்ளிட்ட படங்கள் வெற்றிப்படமாகின. இதற்கிடையே, நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்துகொண்டார்.
தற்போது கவுதம் ராம் கார்த்திக் 'நாளைய இயக்குநர் சீசன் 1' மூலம் கவனத்தை ஈர்த்த சூரியபிரதாப் இயக்கத்தில் ‘ரூட்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இதில் நடிகை பவ்யா திரிகா, கவுதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். பவ்யா திரிகா 'ஸ்ட்ரீ 2' படம் மூலம் பிரபலமானவர். மேலும் பாலிவுட் பிரபல நடிகர் அபார்ஷக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிலையில், நடிகர் கவுதம் ராம் கார்த்திக் ‘ரூட்’ படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார். தற்போது படத்தின் ரிலீசிற்கான பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவதால், படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






