கேங்க்ஸ்டர் கிரைம் திரில்லரான “பிரைடே” டிரெய்லர் வெளியீடு


தீனா, மைம் கோபி, அனீஷ் மாசிலாமணி நடித்துள்ள ‘பிரைடே’ படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது.

தீனா, மைம் கோபி, அனீஷ் மாசிலாமணி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘பிரைடே’. மேலும் ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ரசேனன், சித்து குமரேசன் இணைந்து நடித்துள்ளனர். டக்டம் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஹரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.

கேங்க்ஸ்டர் கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதை, ஒரே இரவில் நடக்கும் வெவ்வேறு பரபரப்பான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பெரும்பாலான காட்சிகள், குளச்சல் பகுதிகளைச் சுற்றி பட மாக்கப்பட்டுள்ளன. இப்படத்தைத் தமிழகம் முழுவதும் வரும் 28ம் தேதி ஷிவானி ஸ்டூடியோஸ் வெளியிடுகிறது.

இந்நிலையில், ‘பிரைடே’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story