மோகன்லாலின் 'விருஷபா' - வைரலாகும் பர்ஸ்ட் லுக்


first look of VRUSSHABHA
x

இப்படம் அக்டோபர் மாதம் 16-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

மலையாள திரை உலகில் தனது 45 வருட திரையுலக பயணத்தில் தற்போது வரை முதல் இடத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான எல்2 எம்புரான், தொடரும் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து தற்போது அவர் கண்ணப்பா, ஹிருதயப்பூர்வம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இப்படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. இந்நிலையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'விருஷபா' குறித்து மோகன்லால் இறுதியாக ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.

அதன்படி, 'விருஷபா' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. அதனுடன், இப்படம் அக்டோபர் மாதம் 16-ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பர்ஸ்ட் லுக் வைரலாகி வரும்நிலையில், இந்த அப்டேட் மோகன்லால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

1 More update

Next Story