ஹீரோவாக களமிறங்கும் பிரபல தயாரிப்பாளர்… படத்தின் டைட்டில் வெளியீடு


ஹீரோவாக களமிறங்கும் பிரபல தயாரிப்பாளர்… படத்தின்  டைட்டில் வெளியீடு
x
தினத்தந்தி 23 May 2025 3:21 PM IST (Updated: 23 May 2025 3:25 PM IST)
t-max-icont-min-icon

தயாரிப்பாளர் கே.ஜே. ராஜேஷ், ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது.

சென்னை,

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் கடந்த 2016ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

இதன் பின்னர் குலேபகாவலி, ஐரா, டிக்கிலோனா, டாக்டர், அயலான் ஆகிய படங்களை தயாரித்திருந்தார். கடைசியாக இவர் ஆலம்பனா எனும் திரைப்படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்து பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட போதும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஏற்படும் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ஜே. ராஜேஷ், ஹீரோவாக கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு அங்கீகாரம் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜே.பி. தென்பாதியான் படத்தை இயக்குகிறார். இவர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநராக இருந்தவர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story