விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் பகத் பாசில்?


fahadh faasil to become Vijay Sethupathi As villain?
x

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, விடுதலை 2 படத்தை தொடர்ந்து 'டிரெயின்' மற்றும் 'ஏஸ்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

அதனை தொடர்ந்து, "பிசினஸ்மேன், டெம்பர், லிகர், டபுள் இஸ்மார்ட்" உள்ளிட்ட படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். பான் இந்தியா அளவில் உருவாக உள்ள இப்படத்தை நடிகை சார்மி கவுர் தயாரிக்க நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இதனையடுத்து இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில், அது பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, 'புஷ்பா', 'மாமன்னன்' உள்ளிட்ட படங்களில் வில்லனாக கலக்கிய பகத்பாசில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் இருவரும் சூப்பர் டீலக்ஸ், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story