‘திரௌபதி 2’ - கதாநாயகியின் பர்ஸ்ட் லுக் வெளியீடு


Draupathi 2: Rakshana Induchoodan’s first look unveiled
x

இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார்.

சென்னை,

2016 ம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரபேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டு திரௌபதி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.

தற்போது அதன் 2-வது பாகத்தை மோகன் ஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ‘திரௌபதி 2’ பட கதாநாயகியின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்தில் ரக்சனா இந்துசூடன் 'திரௌபதி தேவி'யாக நடிக்கிறார்.

1 More update

Next Story