2 நாட்களில் “ஆரோமலே” படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

பிரபல யூடியூபர்களான கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் நடித்த “ஆரோமலே” படம் மக்கள் ஆதரவை பெற்றுவருகிறது.
சாரங் தியாகு இயக்கத்தில் கடந்த 7ம் தேதி வெளிவந்த படம் ‘ஆரோமலே’. சாரங் தியாகு பிரபல நடிகர் தியாகுவின் மகன் ஆவார்.கவுதம் மேனனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து வந்த இவர், தற்போது ஆரோமலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சித்து குமார் இதற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது
இந்நிலையில், ‘ஆரோமலே’படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.1.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story






