பார்க்கிங் செய்வதில் தகராறு - நடிகர் மீது நீதிபதி மகன் போலீசில் புகார்

நடிகர் தர்ஷன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை,
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். இவர் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'கூகுள் குட்டப்பா' படத்திலன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதில் தர்ஷனுக்கு ஜோடியாக அவருடன் பிக்பாஸ் நிக்ழச்சியில் பங்கேற்ற லாஸ்லியா நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் தர்ஷன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் அருகே காரை பார்க் செய்வது தொடர்பான விவகாரத்தில் ஐகோர்ட்டு நீதிபதியின் மகனுக்கும் தர்ஷனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில், ஒரு பெண் மற்றும் நீதிபதியின் மகன் காயமடைந்தநிலையில், இருவரும் அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, நடிகர் தர்ஷன், நண்பர்களோடு சேர்ந்து தாக்கியதாக ஜெ.ஜெ.நகர் போலீசில் நீதிபதியின் மகன் புகாரளித்திருக்கிறார்.
அதேசமயம், நடிகர் தர்ஷன் தரப்பும் புகார் அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, இரு தரப்பு புகார் குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.