“18 மைல்ஸ்” படக்குழுவை வாழ்த்திய இயக்குநர் மணிரத்னம்

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன் ‘18 மைல்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
சென்னை,
தமிழில் ‘சூதுகவ்வும்’ படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் அசோக் செல்வன். தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன் ,நித்தம் ஒரு வானம், சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல், மன்மத லீலை உள்ளிட்ட படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
சமீபத்தில் வெளியான ‘தக் லைப்’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்துவருகிறார். மேலும், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ‘18 மைல்ஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மிர்னா நடித்துள்ளார். இந்த படம் வாழ்க்கையின் எல்லைகளையும், கடலின் அமைதியையும், சொல்லப்படாத உணர்வுகளையும் பேசும் காதல் கதையாகும்.இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
இந்தநிலையில், ‘18 மைல்ஸ்’ படக்குழுவினர் இயக்குநர் மணிரத்னத்தை சந்தித்துள்ளனர். மணிரத்னம் ‘18 மைல்ஸ்’ படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இப்படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.