கென் கருணாஸ் இயக்கும் புதிய படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

நடிகர் கருணாஸ் மகன் கென் இயக்குநராக அறிமுகமாகும் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
2019ம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷின் இளைய மகனாக கென் கருணாஸ் நடித்து இருந்தார் . இவரது நடிப்பு பலராலும் பாராட்டு பெற்றது. அதைத் தொடர்ந்து வாத்தி மற்றும் விடுதலை 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார். மேதகு என்ற படத்தை இயக்கி சலசலப்பை உருவாக்கிய இயக்குனர் கிட்டு அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் 'சல்லியர்கள்'. இப்படத்தின் மூலம் கென் கருணாஸ் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இதில் ஈஸ்வர் என்றவருடன் இணைந்து இசையமைத்திருந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார் கென் கருணாஸ். தற்போது அவர் புதிய படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘காதலன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்தப் படத்தை இயக்கி நடிக்கிறார். படத்தை பார்வதா என்டர்டெயின்மென்ட் கருப்பையா தயாரிக்கிறார். ஆனால் தற்காலிகமாக புரொடக்ஷன் நம்பர் 1 என அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. பள்ளி பருவ வாழ்க்கையை மைய்யமாக வைத்து இப்படம் உருவாகிறது. இப்படத்தில் தேவதர்சினி, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஸ்ரீதேவி, அனிஷ்மா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இது தொடர்பான புரோமோ வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
கென் கருணாஸ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தின் பூஜையில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர், நடிகர் கருணாஸ், இயக்குனர் வெற்றி மாறன், விஷால், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டது..
இந்நிலையில், கென் கருணாஸ் இயக்கும் புதிய படம் 40 நாட்களில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது. புதிய படத்தின் புரோமோ வீடியோ வெளியானது.இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகிறது.






