‘துரந்தர்' படம் வசூல் சாதனை: நடிகர் ரன்வீர் சிங் நெகிழ்ச்சி


‘துரந்தர் படம் வசூல் சாதனை: நடிகர் ரன்வீர் சிங் நெகிழ்ச்சி
x

தடைகளை தாண்டி ‘துரந்தர்’ படம் உலகளவில் ரூ.640 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், அக்‌ஷய் கண்ணா, சஞ்சய் தத், சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் ‘துரந்தர்' படம் கடந்த 5-ந்தேதி வெளியானது. இந்த படம் வெளியாகும் முன்னதாகவே ரிஷப் ஷெட்டியைக் கேலி செய்த விவகாரத்தில் ‘துரந்தர்' படத்துக்கு ஆதரவு தரமாட்டோம் என கன்னட அமைப்பினர் அறிவித்தனர்.

அதேவேளை பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக கூறி பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா ஆகிய 6 அரபு நாடுகளில் இப்படத்துக்கு தடையும் விதிக்கப்பட்டது.

ஆனால் தடைகளை தாண்டியும் ‘துரந்தர்’ படம் உலகளவில் ரூ.640 கோடிக்கும் மேல் வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு ரசிகர்களுக்கு ரன்வீர் சிங் நன்றி தெரிவித்துள்ளார். ‘இக்கட்டான சூழலில் என்னுடன் கைகோர்த்த ரசிகர்களுக்கும், என்னை புரிந்துகொண்ட மக்களுக்கும் நன்றி', என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story