காதல் தோல்வி கதாபாத்திரம் எனக்கு ஒத்துவருகிறது - தனுஷ்

ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் வரும் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.
நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமில்லாமல், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என எல்லா மொழிகளிலும் நடித்து வருகிறார். அதேபோல், அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, பாடகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டுள்ளார்.
நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தேரே இஷ்க் மே’. ஆனந்த் எல் ராய், தனுஷின் முந்தைய பாலிவுட் படங்களான 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' ஆகிய படங்களை இயக்கியவர். முன்னணி பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 28-ம்தேதி வெளியாக இருக்கிறது.
‘தேரே இஷ்க் மே’ படத்தின் புரோமோசன் விழா மும்பையில் நடைபெற்றது. விழாவில் தனுஷ் “காதல் தோல்வி அடைந்த கதாபாத்திரத்திற்கே ஏன் என்னை எப்போதும் அழைக்கிறீர்கள்? என இயக்குநர் ஆனந்திடம் கேட்டேன். அதற்கு அவர் உன்னுடைய முகம் அதற்கு நன்றாக ஒத்துவருகிறது என்றார். அதற்கு பின் கண்ணாடியில் என் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தேன். ஆனால் அதை பாராட்டாகதான் எடுத்துக் கொண்டேன்” என்று கூறினார்.






