பிரபாஸ் படத்தில் இருந்து விலகிய நடிகை தீபிகா படுகோன்

தீபிகா படுகோனுக்கு பதிலாக வேறொரு நடிகை தேர்வு செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சலார்' மற்றும் 'கல்கி 2898 ஏடி' படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில், 'கல்கி 2898 ஏடி' ரூ.1,050 கோடி வசூலித்திருக்கிறது. இந்த படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி, 'ஸ்பிரிட்', 'சலார் 2' மற்றும் 'ராஜா சாப்' உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் .'ஸ்பிரிட்' பிரபாசின் 25வது படமாகும். இதனை, 'அர்ஜுன் ரெட்டி' மற்றும் 'அனிமல்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் பிரபாஸ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. பாலிவுட் பிரபலங்களான சயிப் அலிகான், கரீனா கபூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார். நடிகை தீபிகா படுகோன் கதாநாயகி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து நடிகை தீபிகா படுகோன் விலகி உள்ளார். தீபிகா படுகோனுக்கு பதிலாக வேறொரு நடிகை தேர்வு செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகிற செப்டம்பர் மாதத்தில் தொடங்கு உள்ளதால் அதற்காக படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது.