'திரௌபதி 2' படத்தில் பாடியதற்கு விமர்சனம் - மன்னிப்பு கேட்ட சின்மயி

இப்படத்தின் "எம்கோனே" பாடலை சின்மயி பாடி இருந்தார்.
சென்னை,
‘திரௌபதி' படத்தின் 2-வது பாகத்தை மோகன் ஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தில் ரக்சனா இந்துசூடன் 'திரௌபதி தேவி'யாக நடிக்கிறார்.
இப்படத்தின் "எம்கோனே" பாடல் இன்று மாலை 5.02 மணிக்கு வெளியானது. இதனை சின்மயி பாடி இருந்தார். இதற்கிடையில்,மோகன் ஜி படத்தில் பாடியதற்காக சிம்மயிக்கு எதிராக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், பாடியதற்காக சின்மயி மன்னிப்புக்கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
``எம்கோனே பாடல் பாடியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஜிப்ரானை 18 வருடங்களாக எனக்கு தெரியும். அவரது அலுவலகத்தில் இருந்து இந்த பாடலை பாட அழைத்தபோது, வழக்கம் போல சென்று பாடினேன். அப்போது ஜிப்ரான் இல்லை. இப்போதுதான் எல்லாமே புரிய ஆரம்பிக்கிறது. முன்பே தெரிந்திருந்தால் ஒருபோதும் பாடியிருக்க மாட்டேன். எனக்கும் அந்த கொள்கைகளுக்கும் நிறைய முரண் உள்ளது. இதுதான் முழு உண்மை’’என்றார்.






