பாலாவின் “காந்தி கண்ணாடி” படத்திற்கு நெருக்கடி


பாலாவின் “காந்தி கண்ணாடி” படத்திற்கு நெருக்கடி
x

படத்திற்கு ஷோ இல்ல, பேனர் கிழிக்கிறாங்க. என்று காந்தி கண்ணாடி பட இயக்குநர் ஷெரீப் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை,

சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. தனது காமெடியான ஒன்லைனர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை வெள்ளித்திரையில் நடித்து வந்தாலும், பாலா சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது பலரின் கவனத்தை ஈர்த்தது.

இவர் இயக்குநர் ஷெரீப்பின் காந்தி கண்ணாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். இந்தப் படத்தில் நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கே.பி.ஒய் பாலா நடித்துள்ள 'காந்தி கண்ணாடி' படம் நேற்று வெளியானது. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், படத்திற்கு பல தடங்கல்களும் வருவதாக அப்படத்தின் இயக்குநர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். “படத்திற்கு ஷோ இல்லனு சொல்லி போன் வருவது. ஏன் எதுக்குன்னு தெரியல. சில தியேட்டரில் பேனர் கூட வைக்க விடல, கீழிக்கிறாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. சார் நான் வந்து 50 பைசா 1 ரூபாய்க்கு போஸ்டர் ஒட்டுன பையன் சார். பாலா காரைக்கால்ல இருந்து சினிமா கனவோடு ஓடி வந்த பையன் சார். ஏன் அடிக்குறாங்க, எதுக்கு அடிக்கிறாங்கனு தெரியல. சாத்தியமா புரியல. அதுக்கு செலவு பண்ற காச, வேற எதுக்காவது நல்ல விஷயத்துக்கு செலவு பண்ணுங்க. எங்கள அடிக்கணும்னு தோணுச்சுனா நேரல வந்து செவுல ரெண்டு அடி கூட அடிச்சிட்டு போங்க. படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்துருக்காங்க. அதுக்கு ரொம்ப நன்றி” என ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

1 More update

Next Story