காமெடி நடிகர் லிவிங்ஸ்டன் மகள் கதாநாயகியாக அறிமுகம்!


காமெடி நடிகர் லிவிங்ஸ்டன் மகள் கதாநாயகியாக அறிமுகம்!
x

ஜோவிதா லிவிங்ஸ்டன் தற்போது கே.எஸ்.கிஷான் இயக்கத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

சென்னை,

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வருபவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவரது மகள் ஜோவிதா, சின்னத்திரையில் 'அருவி', 'மவுனம் பேசியதே' போன்ற தொடர்களில் கதாநாயகியாக நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது வெள்ளித்திரையிலும் ஜோவிதா அறிமுகமாக உள்ளார்.

ஜோவிதா லிவிங்ஸ்டன் தற்போது கே.எஸ்.கிஷான் இயக்கத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இப்படத்திற்கான தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இது ஒரு ஹாரர் திரில்லர் படம் என்று கூறப்படும் நிலையில், இதில் கதாநாயகியாக ஜோவிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால், அயலி புகழ் மதன், ஆதர்ஷ் மற்றும் லிவிங்ஸ்டன் நடிக்கிறார்கள்.

விக்னேஷ் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு சங்கீத் மணிகோபால் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் கோபிசெட்டிபாளையத்தில் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே செட்யூலாக நடத்த திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

1 More update

Next Story