சமூக வலைதளங்களை பயன்படுத்த குழந்தைகளுக்கு தடை விதிக்க வேண்டும்- நடிகை சோனாக்சி சின்கா


சமூக வலைதளங்களை பயன்படுத்த குழந்தைகளுக்கு தடை விதிக்க வேண்டும்- நடிகை சோனாக்சி சின்கா
x

16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு குறித்து சோனாக்‌சி கூறியுள்ளார்.

ரஜினி நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சோனாக்சி சின்கா. தொடர்ந்து பாலிவுட் திரை உலகில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தார். நடிகர் சத்துருக்கன் சின்கா மகளான சோனாக்சி. கடந்த ஆண்டு பாலிவுட் தயாரிப்பாளர் நடிகர் ஜாகிர் இக்பாலை திருமணம் செய்து கொண்டார்.

நட்சத்திர தம்பதிகள் இருவரும் மும்பையில் ஒரு கல்லூரியில் நடந்த விழா ஒன்றில் ஜோடியாக பங்கேற்றனர். விழாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலியாவில் தடை விதித்திருப்பது குறித்து சோனாக்‌சி மற்றும் ஜாகிர் இக்பாலிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சோனாக்சி சின்கா, இது மிகவும் நல்ல விஷயம் இந்தியா விலும் இந்த தடையை அமல்படுத்த வேண்டும். எப்போதும் தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் குழந்தைகள் சமூக வலைதளங்களில் எந்த வகையான விஷயங்களை பார்க்கிறார்கள் என்பதை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்..

ஒரு குழந்தை சரி எது, தவறு எது என்பதை வேறுபடுத்தி பார்க்க முடியாத வரை அவர்களை சமூக ஊடகங்களை பயன்படுத்த அனுமதிக்க கூடாது. குறைந்த பட்சம் ஒரு குறிப்பிட்ட வயது வரை ஒரு குழந்தை சரி எது, தவறு எது என அவர்களுக்கு தெரியாது. அதுவரை அந்த குழந்தைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story