தேசிய விருது வென்ற ஷாருக்கானுக்கு அட்லீ வாழ்த்து

நடிகர் ஷாருக்கான் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இயக்குனர் அட்லீ நெகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
சென்னை,
தேசிய விருது வென்ற ஷாருக்கானுக்கு ஜவான் இயக்குனர் அட்லீ வாழ்த்து தெரிவித்துள்ளார்
71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. 2023-ம் ஆண்டு திரைப்பட தணிக்கை வாரியத்தால் சான்று அளிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கான தேர்வில் பங்கேற்றன.
இதில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஷாருக்கான் 'ஜவான்' திரைப்படத்திற்காக வென்றுள்ளார். தனது 33 வருட சினிமா கெரியரில் ஷாருக்கான் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ஜவான் திரைப்படமே இவருக்கு முதல் தேசிய விருதை பெற்று தந்துள்ளது.
இந்நிலையில், தேசிய விருது வென்ற ஷாருக்கானுக்கு ஜவான் இயக்குனர் அட்லீ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"ஜவான் படத்திற்காக நீங்கள் தேசிய விருது பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் ஊக்கமளிப்பதாக உணர்கிறேன். இது என் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாகும். நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன் '' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.