ரஜினியின் 173-வது படம்.. யார் அந்த இயக்குனர்


ரஜினியின் 173-வது படம்.. யார் அந்த இயக்குனர்
x
தினத்தந்தி 31 Dec 2025 4:55 PM IST (Updated: 31 Dec 2025 5:39 PM IST)
t-max-icont-min-icon

சமீபத்தில் படத்தின் கதையை ரஜினியுடன் அஸ்வத் மாரிமுத்து விவாதித்துள்ளார்.

சென்னை,

ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்? என திரை உலகில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ரஜினியின் 173-வது படத்தை டிராகன் பட இயக்குனரான அஸ்வத் மாரிமுத்து இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் படத்தின் கதையை ரஜினியுடன் அஸ்வத் மாரிமுத்து விவாதித்துள்ளார்.அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷன்ல் தயாரிக்க இருக்கிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story