‘லோகா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் அருண் விஜய்?


‘லோகா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் அருண் விஜய்?
x

லோகா படக்குழுவினருடன் நடிகர் அருண் விஜய் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை,

துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் மூலம் ‘லோகா’ படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 28 ம் தேதி வெளியானது. இப்படத்தில், பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சூப்பர்வுமன் படமாக உருவாகி இருக்கும் ‘லோகா’ எனும் மலையாளத் திரைப்படம் தமிழிலும் வெளியாகியுள்ளது. இப்படத்தை டோமினிக் அருண் எழுதி இயக்கியுள்ளார். திரைக்கு வந்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் சூப்பர்வுமன் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் இந்த படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அந்த விழாவில் இந்த படத்தை 5 பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருப்பதாக துல்கர் சல்மான் அறிவித்திருந்தார். எனவே தற்போது லோகா இரண்டாம் பாகம் குறித்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, 'லோகா' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது லோகா படக்குழுவினருடன் நடிகர் அருண் விஜய் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதால் லோகா 2ம் பாகத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பேச்சு அடிபடுகிறது.

1 More update

Next Story