ஓடிடியில் ’கென்னடி’ - அனுராக் காஷ்யப், சன்னி லியோன் படத்தை எப்போது, ​​எங்கு பார்க்கலாம்?


Anurag Kashyap–Sunny Leone’s Kennedy Finally Gets a Digital Release Date, But There’s a Disappointing Catch
x
தினத்தந்தி 10 Dec 2025 7:43 PM IST (Updated: 10 Dec 2025 7:43 PM IST)
t-max-icont-min-icon

கென்னடி கேன்ஸ் 2023-ல் மிட்நைட் ஸ்கிரீனிங்ஸ் பிரிவில் திரையிடப்பட்டது

சென்னை,

ராகுல் பட் மற்றும் சன்னி லியோன் நடிப்பில் அனுராக் காஷ்யப் இயக்கிய திரில்லர் படமான கென்னடி, நீண்ட நாட்களுகு பிறகு இறுதியாக ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்தப் படம் இன்று முதல் 'லெட்டர்பாக்ஸ் வீடியோ ஸ்டோரில்' ஸ்டிரீமிங் ஆகிறது.

இருப்பினும், லெட்டர்பாக்ஸ் வீடியோ ஸ்டோர் இன்னும் இந்தியாவில் தொடங்கப்படவில்லை. இந்த சேவை அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவின் போன்ற சில நாடுகளில் மட்டுமே கிடைக்கும், இதனால் இந்திய பார்வையாளர்களால் இப்படத்தை தற்போது பார்க்க முடியாது.

கென்னடி முதன்முதலில் கேன்ஸ் 2023 இல் மிட்நைட் ஸ்கிரீனிங்ஸ் பிரிவில் திரையிடப்பட்டது, அங்கு பாராட்டைப் பெற்றது. பின்னர் ஜியோ மாமி மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

1 More update

Next Story