சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அனுபமாவின் ‘லாக்டவுன்’


Anupamas Lockdown to be screened at international film festival
x

இந்த படத்தை இயக்குனர் ஏஆர் ஜீவா இயக்கியுள்ளார்.

சென்னை,

அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியுள்ள லாக்டவுன் திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இன்று திரையிடப்பட உள்ளது.

லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள 'லாக் டவுன்' திரைப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஏஆர் ஜீவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு என்ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இப்படம் டிசம்பர் மாதம் 5ந் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story