நடிகை சாய் பல்லவியை பாராட்டிய அனுபம் கெர்

சாய் பல்லவி திறமையான நடிகை என நடிகர் அனுபம் கெர் பாராட்டியுள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டுக்கான 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில் இன்று கோலாகலாக தொடங்கி உள்ளது. இந்த விழா வருகிற 28ந் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில் , 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன. இவ்விழாவில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த 'அமரன்' படம் இந்தியன் பனோரமா பிரிவில் முதல் திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அமரன் படக்குழுவினர் கோவா சென்றனர். இவ்விழாவில் பழம்பெரும் நடிகர் அனுபம் கெர் உள்ளிட்டப் பலப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
கோவாவில் நடந்து வரும் 56-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் இவ்விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் முதல் திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அமரன் படக்குழுவினர் கோவா சென்றனர். இவ்விழாவில் பழம்பெரும் நடிகர் அனுபம் கெர் உள்ளிட்டப் பலப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அப்போது சாய் பல்லவியுடன் நடிகர் அனுபம் கெர் செல்பி எடுத்துக்கொண்டார். அந்த சந்திப்புக்குப் பிறகு அனுபம் கெர் தன் டுவிட்டர் பக்கத்தில், “சாய் பல்லவி உண்மையானவர், பாசமுள்ளவர், தனித்துவமானவர், மரியாதையானவர் என உணர்ந்தேன். திறமையான நடிகை. இந்த சந்திப்பு சிறப்பாக இருந்தது. அவரின் திரைப்படங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.






