ஜப்பானில் வெளியாகும் “புஷ்பா 2”
அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படம் 2026 ஜனவரி 16ம் தேதி ஜப்பான் நாட்டில் வெளியாகிறது.
நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகி கடந்த 2024 ம் ஆண்டு வெளியான ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில், நடிகர்கள் பகத் பாசில், ரஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். மேலும் சாம் சி எஸ் இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்திருந்தார்.

இந்த நிலையில், ‘புஷ்பா 2’ திரைப்படம் வரும் 2026 ஜனவரி 16ம் தேதி ஜப்பான் நாட்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஜப்பானிய மொழி டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story







