’அகண்டா 2’ ’டிரெய்லர் வெறும் கிளிம்ப்ஸ்தான்’ - சம்யுதா மேனன்

’அகண்டா 2’ டிசம்பர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
சென்னை,
சம்யுக்தா மேனன் தற்போது பாலையாவுடன் அகண்டா 2 படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் டிசம்பர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கர்நாடகாவில் நடந்தது.
இந்த விழாவில் பேசிய சம்யுதா மேனன், டிரெய்லர் வெறும் ஒரு கிளிம்ப்ஸ்தான் என்றும் , படத்தை திரையில் பார்க்கும்போது, அது நிச்சயமாக உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தைத் தரும் என்றும் கூறினார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான ''பாப்கார்ன்'' மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் சம்யுக்தா.
பின்னர் 'பீம்லா நாயக்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதன் பிறகு, 'பிம்பிசாரா', 'சார்' மற்றும் 'விருபக்சா' போன்ற சூப்பர் ஹிட் படங்களின் மூலம் தெலுங்கு பார்வையாளர்களுக்கு நெருக்கமாகிவிட்டார்.
தமிழில் இவர் தனுஷுடன் வாத்தி படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.






