"அகத்தியா" படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு


அகத்தியா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 24 March 2025 9:45 PM IST (Updated: 25 March 2025 1:40 PM IST)
t-max-icont-min-icon

ஜீவா நடிப்பில் ஹாரர் அட்வென்ச்சர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'அகத்தியா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். கடைசியாக இவர் பிளாக் படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தையடுத்து ஜீவா, பா.விஜய் இயக்கத்தில் 'அகத்தியா' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அர்ஜுன், ராஷி கன்னா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் 1940 காலகட்டத்திலும், தற்போது நடப்பது போலவும் எடுக்கப்பட்டிருந்தது. 'அகத்தியா' திரைப்படம் உலகளவில் ரூ. 4 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 28 ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.


Next Story