நானியின் ’ஜெர்சி’ படத்தை மிஸ் பண்ண நடிகை - யார் தெரியுமா?


Actress who miss Nanis Jersey - Do you know who?
x

’ஜெர்சி’ நானியின் கெரியரில் சிறந்த படங்களில் ஒன்றாகும்.

சென்னை,

நடிகர் நானி உதவி இயக்குநராக தனது திரைப்படப் பயணத்தைத் தொடங்கினார்.. இப்போது அவர் ஒரு நட்சத்திர ஹீரோவாக தனக்கென ஒரு இமேஜை உருவாக்கி வைத்துள்ளார். வித்தியாசமான படங்களைத் தேர்ந்தெடுத்து தொடர்ச்சியான வெற்றிகளுடன் வலம் வருகிறார்.

’ஜெர்சி’ திரைப்படம் நானியின் கெரியரில் சிறந்த படங்களில் ஒன்றாகும். 2019 இல் வெளிவந்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில், நானிக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். ஆனால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்தப் படத்திற்கு முதலில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இந்தப் படத்திற்கு முதலில் ரெபா மோனிகா ஜான்தான் கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அப்போது அவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் தொடர்ச்சியான படங்களில் நடித்து வந்ததால், இந்தப் படத்தை மறுத்திருக்கிறார். பின்னர், அவருக்குப் பதிலாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்தார்.

ஜெர்சி படத்தில் நானியின் மனைவியாகவும், ஒரு குழந்தைக்குத் தாயாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இந்தப் படத்திற்குப் பிறகு ஷ்ரத்தாவுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும், அங்கீகாரம் கிடைக்கவில்லை.

1 More update

Next Story