தி.மலையில் மெய் மறந்து பாடல் பாடிய நடிகை சுகன்யா


தி.மலையில் மெய் மறந்து பாடல் பாடிய நடிகை சுகன்யா
x

நடிகை சுகன்யா தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

திருவண்ணாமலை,

80 காலகட்டத்தில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம்வந்தவர் தான் நடிகை சுகன்யா. பரதநாட்டிய கலைஞரான இவர் நடிப்பை தாண்டி நாட்டியம், இசையின் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார், முதல் படத்திலேயே விருதுகளை பெற்றார். அதன் பின் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில் ஸ்ரீ ரமண மகரிஷி 75 ஆம் ஆண்டு ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகை சுகன்யா பங்கேற்று மெய்மறந்து ரமணர் பாடல் பாடினார். பின்னர் ஆஸ்ரமத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேக, தீப ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

1 More update

Next Story