பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்


Actress Saroja Devi passes away
x
தினத்தந்தி 14 July 2025 10:25 AM IST (Updated: 14 July 2025 4:03 PM IST)
t-max-icont-min-icon

நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக காலமானார்.

நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 87.

இந்திய திரைத்துறை வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சரோஜா தேவி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவரது 14 -ம் வயதில் மகாதேவி காளிதாசா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 1955 -ல் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

எம்.ஜி.ஆர். உடன் 26 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் நடித்துள்ளார். 50 ஆண்டுகால திரை வாழ்வில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் ஒன்ஸ்மோர், சூர்யாவுடன் ஆதவன் படங்களில் சரோஜா தேவி நடித்திருந்தார்.

கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி உள்ளிட்ட அடைமொழிகளில் ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். இவரது நடிப்பிற்காக பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றார். 2008ல் வாழ்நாள் சாதனையாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதைப் பெற்றிருந்தார்.

இவருக்கு 1967ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி ஸ்ரீ ஹர்ஷாவுடன் திருமணம் நடந்தது. இவருக்கு இந்திரா, கவுதம் ராமசந்திரன் என்ற பிள்ளைகள் உள்ளனர். ஸ்ரீஹர்ஷா 1986ம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

நடிகை சரோஜாதேவி கடைசி நிமிடங்கள்

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி இன்று காலை 8.30 மணி அளவில் வீட்டில் இருந்தபோது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

1 More update

Next Story