தமிழில் நடிக்க விரும்பும் நடிகை சாரா அர்ஜுன்

சாரா அர்ஜுன், ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ படம் நாளை வெளியாகிறது
‘தெய்வத்திருமகள்’ படத்தில் நிலாவாக நடித்த சாரா அர்ஜுனை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. படத்தின் இறுதியில் விக்ரம், சாரா அர்ஜூன் இடையே நடக்கும் பாச போராட்டம் அனைவரது கண்களையும் குளமாக்கியது. அதனைத்தொடர்ந்து விஜய் இயக்கத்தில் 'சைவம்' படத்தில் சாரா நடித்தார். மும்பையைச் சேர்ந்த சாரா அர்ஜுன் அதனைத்தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு ‘பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன், தற்போது ரன்வீர் சிங் ஜோடியாக ‘துரந்தர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை ரிலீசாகிறது.
பட விழாவில் சாரா அர்ஜூன் “நான் பாலிவுட்டில் கதாநாயகியானது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா மொழிகளிலும் நான் படங்கள் நடிக்க ஆசைப்படுகிறேன். குறிப்பாக தமிழிலும் கதாநாயகியாக ஜொலிக்க விரும்புகிறேன். நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.






